சாக்கடை கால்வாய் பணி

Update: 2022-09-13 16:59 GMT

சேலம் மாவட்டம் 11-வது தாலுகா பொன்னம்மாபேட்டை தில்லை நகர் மெயின் ரோடு பகுதியில் சாக்கடை கால்வாய் பணி கடந்த 1 வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. சாக்கடை கால்வாய் அமைக்க தோண்டிய குழிகள் சரியாக மூடப்படாததால் சாலை முழுவதும் மண் புழுதியாக உள்ளது. இதனால் தினமும் அலுவலகம், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே கிடப்பில் உள்ள சாக்கடை கால்வாய் பணிகளை விரைந்து முடித்து சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-வெங்கடேஷ், பொன்னம்மாபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்