கழிவுநீர் வடிகால் சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-13 11:24 GMT

தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் மேட்டுத்தெரு பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகால் முறையான பராமரிப்பின்றி உள்ளது. இதன்காரணமாக வடிகாலை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும், வடிகாலுக்குள் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கழிவுநீர் வடிவதற்கு வழியின்றி தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் வடிகாலை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்