சேலம் பழைய பஸ் நிலையத்தில் கழிப்பறை வசதி ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் உள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் பஸ் நிலையத்தில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தி பஸ் நிலையத்தை தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரவி, சேலம்.