சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

Update: 2022-07-12 17:39 GMT

  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பருவதன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட முல்லை நகரில் சிமெண்டு சாலை மற்றும் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பென்னாகரத்தில் இருந்து தர்மபுரி செல்லும் முக்கிய சாலையில் தேங்கி நிற்கிறது. சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் நோய்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. அதிகாரிகள் இதனை உடனே சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்