தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் இருந்து தர்மபுரி செல்லும் சாலையில் சாக்கடை கால்வாயை சீரமைப்பதற்காக குழிகள் தோண்டப்பட்டன. ஆனால் இந்த பணி கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் பொது மக்கள், மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்துரு, தர்மபுரி.