திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரியூர் அம்மன் நகரில் குடியிருப்புகளில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். சிலர் தங்கள் வீடுகள் முன்பு பெரிய சிமெண்டு தொட்டி கட்டி கழிவுநீரை தேக்கி வருகிறார்கள். இதனால்அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.