பெங்களூரு பேகூர் விஸ்வபிரியா லே-அவுட் 8-வது கிராஸ் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு மணல் எடுக்கப்பட்டது. அந்த மணல் சாலையோரம் குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளும் ஆமை வேகத்தில் நடந்து வருவதால் அப்பகுதி கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.