சாலையில் ஓடும் கழிவுநீர்

Update: 2022-09-09 16:28 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜாகடை அருகே சிந்துகபள்ளி கிராமத்தில் முறையான சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வரும் கழிவுநீர் சாலையில் விடப்படுகிறது. அப்பகுதியில் சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பலர் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே உடனடியாக சாலையை சீரமைத்து கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

-பழனி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்