சூலூர் அருகே அரசூர் பகுதியில் வரப்புப்பிள்ளையார் கோவில் முதல் கரும்பாறை பள்ளம் வரை சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்கி சாலையில் செல்கிறது. இதன்காரணமாக அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்ேகடு ஏற்பட்டு வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு நோய்கள் பரவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடையை தூர்வாரி கழிவுநீர் தங்குதடையின்றி செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?
நித்யானந்தம், சூலூர்.