பெங்களூரு மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பயணிகள் வசதிக்காக பஸ் நிலையத்தில் குடிநீர் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அந்த மையத்தின் அருகே அதாவது பஸ் நிலையத்திற்குள் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. அந்த கழிவுநீரில் இருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் பயணிகளை கடித்து வருகிறது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. பயணிகள் நலனை பாதுகாக்கும் வகையில் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.