தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மஜித் தெருவில் 100-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வாரி சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளையராஜா, பொ.மல்லாபுரம், தர்மபுரி.