கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்திற்குள் மழைநீர் தேங்கி குளம் போல் நிற்கிறது. இங்குள்ள கால்வாய் தூர்வாராமல் இருப்பதால் மழைநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார வளாகத்திற்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே மழைநீர் தேங்காமல் இருக்க கால்வாயை முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வாசு, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி.