கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும்

Update: 2022-09-06 10:11 GMT

தஞ்சை மாவட்டம் மேலவெளி ஊராட்சி களிமேடு கிராமம் தஞ்சை - பூதலூர் சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இது முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சி அளிக்கிறது. மேலும், கால்வாய்க்குள் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன்காரணமாக கழிவுநீர் வழிந்தோட வழியில்லாமல் சாக்கடையாய் மாறிவருகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் சூழலை ஏற்படுத்துகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்