சுகாதார சீர்கேடு

Update: 2022-09-05 17:36 GMT

நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி செல்லும் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. பாலத்தின் கீழ் இறங்கியபிறகு ஒட்டக்குளம்புதூர் செல்லும் சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதன் காரணமாக கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் துர்நாற்றத்தால் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்த சாக்கடை கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதீஷ்குமார், நாமக்கல்.

மேலும் செய்திகள்