தர்மபுரி மாவட்டம் வெங்கடசமுத்திரம் ஊராட்சி செங்கல்பட்டி, அண்ணா நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாயில் கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் சுத்தம் செய்வதில்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாக்கடை கால்வாயில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மணி, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.