கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்

Update: 2022-09-05 16:22 GMT

பர்கூர் ஒன்றியம் மல்லப்பாடி ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் 50-கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் முறையான கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் கழிவுநீர் சாலையோரத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும்.

-ரஞ்சித், பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்