ஓசூர் சீதாராம் மேடு அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டப பகுதி சாலையின் நடுவே கழிவுநீர் நீண்ட காலமாக தேங்கி நிற்கிறது. இங்கு ஏராளமான குடியிருப்பகள் உள்ளன. இந்த பிரச்சினை குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்.
-தாஜுத்தீன், ஓசூர்.