தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2022-09-05 15:22 GMT
பெங்களூரு ஒகலிபுரத்தில் இருந்து மெஜஸ்டிக் பஸ் நிலையம் செல்லும் சேஷாத்திரிபுரம் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த சாலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். மேலும், மழைநீருடன் கழிவு நீர் கலந்து இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அசுத்த நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்