கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் கருவூலம் அமைந்துள்ளது. அங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இந்தநிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது அந்த கழிப்பிடம் பராமரிக்கப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அங்கு வருபவர்கள் மூக்கை பிடித்து கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தை பராமரித்து தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-முனியப்பன், தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.