தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கேசர் குளிரோடு மற்றும் அப்துல்லா சந்து இணைப்பு பகுதியில் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் செல்லமுடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி தொல்லை அளித்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் சாக்கடை கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழைநீரும் சாக்கடை நீரும் கலந்து வீட்டுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக சாக்கடை கால்வாய் அடைப்பை சரி செய்ய வேண்டும்.
-ராஜேஷ், பாலக்கோடு, தர்மபுரி.