தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 2-வது வார்டு இ.பி. காலனி கோட்டை மாரியம்மன் கோவில் அருகே சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. அதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பொது மக்களின் நலன் கருதி உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செந்தில்குமார், மாரண்டஅள்ளி, தர்மபுரி.