பெங்களூரு சர்ஜாபுராவில் இருந்து கார்மேலரம் செல்லும் சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தூர்வாரும் பணி நடந்தது. இதனால் சாக்கடை கால்வாய் மூடி அப்புறப்படுத்தப்பட்டு இருந்தது. அங்கு தூர்வாரும் பணி நடந்த போது பள்ளம் விழுந்தது.
தற்போது பெய்து வரும் மழையால் பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. இரவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் தவறி விழும் அபாயம் உள்ளது. இதனால் சாக்கடை கால்வாயை உடனடியாக மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.