சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பெருமாகவுண்டம்பட்டி சஞ்சீவிராய பெருமாள் கோவிலுக்கு எதிரே சவுடேஸ்வரி அம்மன் நகருக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொது மக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் சாக்கடை கால்வாய் வசதியும் இல்லை. எனவே அதிகாரிகள் இந்த சாலையை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வைஷிகாஸ்ரீ, பெருமாகவுண்டம்பட்டி, சேலம்.