ஈரோடு மாநகராட்சி திண்டல் அருகே உள்ள செங்கோடம்பாளையம் பகுதியில் டெலிபோன் சிட்டி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு செல்லும் சாலையை ஒட்டி கழிவு நீர் தேங்கி உள்ளது. மழை பெய்தாலும், பெய்யாவிட்டாலும் இங்கு எப்போதும் சாக்கடை தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். வாகனங்கள் சாக்கடை மீது செல்வதால் சாலையில் பள்ளம் ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.