சங்கராபுரம் ஒன்றியம் வடபொன்பரப்பி அந்தோனியார்புரத்தில் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக இந்த பகுதியில் வெளியேறும் கழிவுநீர் வடிகாலில் தேங்கி நின்று, வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே வடிகாலை தூர்வாரி, தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.