தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலி பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை சுத்தம் செய்ய வரும் பணியாளர்கள் சாக்கடை கழிவுகளை சாலையோரத்தில் குவித்து வைத்துவிட்டு மறுநாள் அள்ளிச்செல்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் வடிகாலில் இருந்து அள்ளப்படும் சாக்கடை கழிவுகளை உடனுக்குடன் எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?