சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா தும்பிப்பாடி கிராமத்தில் சரக்கபிள்ளையூர் முருகன் கோவில் தெருவில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் அந்த பகுதியின் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ்குமார், சேலம்.