அரசு பள்ளி அருகே தேங்கும் கழிவுநீர்

Update: 2022-08-29 16:17 GMT

தா்மபுாி மாவட்டம் ஏரியூரில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் சுற்றுச்சுவர் அருகே சாக்கடை நீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் துர்நாற்றத்தால் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பல மாதங்களாக சாக்கடை நீர் தேங்குவதால் சுற்றுச்சுவர் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் உள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஞானவேல், ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்