கழிவுநீரால் சேதமான சாலை

Update: 2022-08-26 16:30 GMT

சேலம் சேகோ சர்வையொட்டி நரசோதிப்பட்டி மெயின் ரோட்டில் சாக்கடை கால்வாய் உடைந்து கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. இதனால் அந்த சாலை சேதமடைந்து பள்ளம் பள்ளமாக காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். அந்த பகுதி சுகாதாரமற்ற நிலையில் காணப்படுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சாக்கடை கால்வாயை சரிசெய்து, சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவேண்டும்.

-கிரிதரண், நரசோதிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்