சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றியம் நிலவாரபட்டி ஊராட்சி பகுதியில் வெங்கடேஸ்வரா நகரில் ஏராளமாக குடியிருப்புகள் உள்ளன. இந்தநிலையில் குடியிருப்புகளுக்கு அருகே மழைநீர் கால்வாய் செல்கிறது. தற்போது அந்த கால்வாயில் கழிவுநீர் உறிஞ்சிக்குழாய் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேறாமல் வீடுகளுக்குள் புகுந்துவிட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ்குமார், பனமரத்துப்பட்டி, சேலம்.