மயிலாடுதுறை, பூம்புகார் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு எதிரே அய்யங்குட்டை உள்ளது. இந்த குட்டையின் மூலம் அந்த பகுதி மக்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். தற்போது இந்த குட்டை உரிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. மேலும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதிமக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குட்டையில் உள்ள கழிவுநீரை அகற்றி விட்டு நல்ல நீரை நிரப்ப வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பொதுமக்கள், மயிலாடுதுறை.