தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம் கும்மனூர் ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக கழிவுநீர் கால்வாய் மற்றும் பொது இடங்களிலும், மளிகைகடை, பெட்டிகடை உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.
-பிரியங்கா, கும்மனூர், தர்மபுரி.