தஞ்சை-நாகை சாலை சோழன் நகர் அருகே பாதாள சாக்கடை குழியிலிருந்து கழிவு நீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள் சென்றால் கழிவுநீர் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது தெரித்து விடுகிறது. அருகில் வீடுகள் இருப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடை குழியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் , தஞ்சை.