சேலம் சூரமங்கலம் அருகே தர்ம நகர் முதல் தெருவில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்தநிலையில் மீன்கழிவுகளை அகற்றாமல் ஆங்காங்கே சாக்கடை கால்வாயில் தேங்கி நிற்கிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளது. அந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. மேலும் அந்த வழியாக செல்பவர்கள் மூக்கை பிடித்துகொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரமற்ற நிலையில் காணப்படும் மீன்மார்க்கெட்டை தூய்மையாக வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-செந்தில், சூரமங்கலம், சேலம்.