சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி பி.நாட்டாமங்கலம் 9-வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் சாக்கடை கால்வாய், சாலை வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். கழிவு நீர் சாலைகளில் ஓடு்வதால் அந்த பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று ஏற்படும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி சாக்கடை கால்வாய் மற்றும் தார் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-விஷ்வா, பனமரத்துபட்டி, சேலம்.