கூடலூர் நகராட்சி 10-வது வார்டு சிட்டப்ப கவுடர் தெரு, குருசிக்கு கவுடர் தெரு ஆகிய பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கழிவுநீரில் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசு உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய்களை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்