ரவுண்டானா அமைப்பார்களா?

Update: 2023-02-15 17:38 GMT

வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை மாற்றப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. திருப்பத்தூர் நகருக்கு வரும் பஸ்கள் மெயின் ரோட்டில் சென்று வளைய வேண்டிய சூழ்நிலையும், அதே போல் பஸ்கள் வெளியே வரும்போது கலெக்டர் அலுவலகம் எதிரில் சென்று அடைய வேண்டிய நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலை என்பதால் ஏராளமான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பகுதிகளில் பெரிய ரவுண்டனா ஏற்படுத்த வேண்டும் அல்லது பஸ் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

-ராஜேஷ்குமார், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்