ஜோலார்பேட்டையை அடுத்த குன்னத்தூர் அருகே கவுண்டப்பனூர் பகுதியில் உள்ள தார் சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சிதறி கிடக்கிறது. பல இடங்களில் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைப்பார்களா?
-கே.ஜி.சரவணன், குன்னத்தூர்.