மலைக்கிராம சாலையை சீர் செய்வார்களா?

Update: 2026-08-30 18:44 GMT

ஜமுனாமரத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட பாதிரி, மஞ்சுத்து, பெரியவெள்ளி ஆகிய மலைக் கிராமங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். குட்டக்கரை ஊராட்சிக்கு 7 கி.மீ. மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். அந்தக் கிராமத்துக்கு ஏற்கனவே போடப்பட்ட சாலை மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு கரடு முரடாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைத்துத்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சரவணன், குட்டக்கரை. 

மேலும் செய்திகள்