மயான பாதையை சீரமைப்பார்களா?

Update: 2025-04-20 19:47 GMT

கண்ணமங்கலம் பேருராட்சி நாகநதி தென்கரையில் உள்ள மயானத்துக்கு செல்ல கரையோரம் சில ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை, மழைக்காலத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அந்த வழியாக பிணங்களை பாடையில் தூக்கி செல்ல முடியாமல், அருகில் உள்ள தனியார் நிலம் வழியாகச் சென்று மயானத்தில் உடல்களை புதைத்து வருகின்றனர். எனவே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பழுதடைந்த நிலையில் உள்ள மயான பாதையை விரைவில் சீரமைக்க ேவண்டும்.

-கார்த்திக், கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்