வாலாஜாபேட்டை நகரில் சென்னையை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊர் எல்லை தொடக்கத்தில் பச்சையம்மன் கோவில் உள்ளது. அதன் எதிரில் அதிகளவில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் செடி, கொடிகள், புதர்கள் வளர்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஓரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-வரதராஜன், வாலாஜா.