சாலையை சரி செய்வார்களா?

Update: 2022-12-11 12:17 GMT

கண்ணமங்கலம் அருகில் கல்பட்டு கிராமத்தில் இருந்து 1.7 கிேலா மீட்டர் தூரம் வரை உள்ள சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. பின்னர் ஜல்லி சாலையாக போடப்பட்டது. தற்போது தார் சாலையோ சிமெண்டு சாலையோ அமைக்கவில்லை. தற்போது பெய்த மழையால் சாலை மோசமாக உள்ளது. குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. அந்தச் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-பொன்னுசாமி, கண்ணமங்கலம்.

மேலும் செய்திகள்