சாலையை சீர் செய்வார்களா?

Update: 2022-09-09 12:27 GMT

வேலூர் கலெக்டர் அலுவலகத்தை அடுத்து போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இதன் பின்பக்கம் உள்ள தென்றல் நகர் பகுதியில் ஏராளமான மக்கள், அரசு அலுவலர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கால்வாய் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டு உள்ளது. சமீப காலமாக மழைப் பெய்து வருவதால் சாலை சேறும் சகதியுமாக நெல் நாற்று நடவுக்கு உழவடித்த சாலையாக மாறி விட்டது. கடந்த 3 மாதங்களாக பணி நடைபெறவில்லை. இதனால் அந்த சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இனியாவது மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

-காளியப்பன், ஓய்வுபெற்ற பத்திரப்பதிவுத்துறை அலுவலர், தென்றல்நகர்.  

மேலும் செய்திகள்