சாலையை சரி செய்வார்களா?

Update: 2022-08-25 11:33 GMT

போளூர் ெரயில்வே மேம்பாலப் பணிகள் நடந்து வருவதால், அந்தப் பாதைக்கு பதிலாக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதை மண் சாலையாக இருப்பதால் மழை பெய்யும்போதெல்லாம் உழவடித்ததுபோல் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. வேறு வழியின்றி பள்ளி மாணவ-மாணவிகள் சேற்றில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிக்கி தவிக்கின்றனர். மாற்றுப்பாதையில் முரம்புமண் கொட்டி சரி செய்வார்களா?

சரவணன் போளூர்

மேலும் செய்திகள்