சாலையை சரி செய்வார்களா?

Update: 2022-08-25 09:32 GMT

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கான மருத்துவமனை திருவண்ணாமலை காந்தி நகர் 6-வது தெருவில் செயல்பட்டு வருகிறது. அதற்கு செல்லும் சாலை தாழ்வாக உள்ளது. மழை வரும்போதெல்லாமல் மருத்துவமனை முன்பு கழிவுநீரும், மழைநீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. நோயாளிகள் அந்த வழியாக செல்ல சிரமப்படுகின்றனர். முன்னாள் படைவீரர்களின் நலன் கருதி நகாட்சி நிர்வாகம் சாலை வசதி செய்து தருமா?

ருஷிகேசவன், கர்னல் (ஓய்வு), திருவண்ணாமலை

மேலும் செய்திகள்