வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் காணப்படுகின்றன. அந்த வழியாக அதிகமான பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்கின்றனர். இதனால் இரவில் அவர்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், வேலூர்.