அரக்கோணம் புதிய பஸ் நிலைய வளாகத்தில் இருந்து திருத்தணி செல்லும் பாதையில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் அருகே மற்றும் திருப்பத்திலும் உள்ள சாலையும் குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால், கடந்த சில நாட்களாக பெய்த மழைநீர் அந்தப் பள்ளங்களில் தேங்கி குட்டைபோல் காட்சியளிக்கிறது. வாகனங்கள் செல்லும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் தேங்கும் மழைநீரை வடிய வைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுந்தரம், அரக்கோணம்.