வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. அங்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். கோவில் எதிரே உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அதில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சியளிக்கிறது. எனவே கோவில் எதிரே சிமெண்டு சாலை போட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-திருமலை, வெம்பாக்கம்.