ஆற்காட்டில் உள்ள பிரதான சாலைகளில் ஒன்றாக திகழ்வது வேலூர் மெயின் ரோடு. இப்பகுதியில் இருந்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1-க்கு செல்ல வேண்டும் என்பதால் இந்தப் பகுதியில் கனரக, நான்கு, இரு சக்கர வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. சாலை திருப்பத்தில் அதிக எடையோடு லாரிகள் திரும்புவதால் அடிக்கடி சாலை பழுதாகிறது. விபத்துகளும் ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க இப்பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்கப்படுமா?
-சக்கரபாணி, ஆற்காடு.