வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் அருகே நான்கு சாலைகளின் சந்திப்பு உள்ளது. வேலூர் கோர்ட்டு பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், சத்துவாச்சாரியில் இருந்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் நோக்கி செல்லும் சாலைகள், அங்கிருந்து வரும் சாலைகள், கோர்ட்டு நோக்கி செல்லும் சாலைகள் ஒரே இடத்தில் சந்திக்கின்றன. இந்தச் சந்திப்பில் எவ்வித வேகத்தடையும் இல்லை. அதனால் அந்தச் சாலைகளில் வரும் இருசக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாககனங்களும் வேகமாக இந்தச் சந்திப்பை கடக்கின்றனர். இதன்காரணமாக எதிர்பாராத விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே சந்திப்பின் அருகே நான்கு சாலைகளிலும் வேகத்தடை அமைக்கப்படுமா?
-பரசுராமன், சத்துவாச்சாரி.